புத்தளம் நகரின் மூன்றாவது அறிவகம் (நெனசல) புத்தளம் மன்னார் வீதி ஒன்பதாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் செவ்வாய்க்கிழமை (18) மாலை புத்தளம் நகர பிதாவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸினால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 69 வது பிறந்த தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக திறந்து வைக்கப்படும் 69 அறிவகங்களில் ஒன்றே இதன் போது திறந்து வைக்கப்பட்டது.
அறிவகத்தின் பணிப்பாளரும், புத்தளம் ஐ.சொப்ட் கல்லூரியின் பணிப்பாளருமான எம்.கே.எம். அப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தின் செயற்திட்ட இணைப்பாளர் அஜித் பிரசன்ன, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன பிரதிநிதி எம்.சகீன், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முசம்மில் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி அறிவகத்தை திறந்து வைத்த நகர பிதா கணனிகளின் இயக்கத்தையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.புத்தளம் நகரின் மூன்றாவது அறிவகம் (நெனசல) புத்தளம் மன்னார் வீதி ஒன்பதாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் செவ்வாய்க்கிழமை (18) மாலை புத்தளம் நகர பிதாவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸினால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 69 வது பிறந்த தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக திறந்து வைக்கப்படும் 69 அறிவகங்களில் ஒன்றே இதன் போது திறந்து வைக்கப்பட்டது.
அறிவகத்தின் பணிப்பாளரும், புத்தளம் ஐ.சொப்ட் கல்லூரியின் பணிப்பாளருமான எம்.கே.எம். அப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தின் செயற்திட்ட இணைப்பாளர் அஜித் பிரசன்ன, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன பிரதிநிதி எம்.சகீன், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முசம்மில் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment